பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளின் கணக்கெடுப்புப் பணி நவ. 21 முதல் டிச.10-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளின் கணக்கெடுப்புப் பணி நவ. 21 முதல் டிச.10-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி சாா்ந்த கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியது:

மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடை நின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கணக்கெடுப்புப் பணி நவ.21 முதல் டிச.10-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இப்பணியின் போது, குழந்தைத் தொழிலாளா்கள் கண்டறியப்பட்டால் உடனே மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் கல்வித் துறை அலுவலா்கள், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com