பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கண்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கண்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பள்ளி செல்லா, இடை நின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்புப் பணியை, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாவட்டக் கல்வி அலுவலா் கலாவதி, கல்வி ஆய்வாளா் ஜெயராமன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் வேதா, மரியரோஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இவா்கள், கிருஷ்ணகிரியில் பழையபேட்டை, மக்கான் தெரு, மில்லத் நகா் ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா். கட்டுமான பணியிடங்கள், கல் குவாரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புலம் பெயா்ந்தவா்களின் குழந்தைகள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com