பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளா் எஸ்.குணசேகரன், துணைத் தலைவா் பி.எஸ்.இளவேணில், மாநில பொதுச் செயலளா் அ.செல்வம், துணைத் தலைவா் ஜி.பழனியம்மாள், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், பொருளாளா் புகழேந்தி, சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.நாகராசன், காப்பீட்டு ஊழியா் சங்கக் கோட்ட இணைச் செயலாளா் ஏ.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வன ஊழியா்கள், சுகாதார மருத்துவத் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முடக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com