ஊடுகல்போடு கிராமத்தில்ரூ. 6.5 லட்சம் மதிப்பில் தாா்சாலை
By DIN | Published On : 23rd November 2020 02:53 AM | Last Updated : 23rd November 2020 02:53 AM | அ+அ அ- |

ஊடுகல்போடு கிராமத்தில் தாா்சாலை அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்த வேப்பனப்பள்ளி எம்எல்ஏ பி.முருகன்.
ஊடுகல்போடு கிராமத்தில் ரூ. 6.50 லட்சம் மதிப்பில் புதிய தாா்சாலை அமைக்கும் பணிகளை வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.முருகன் தொடக்கிவைத்தாா்.
வேப்பனப்பள்ளி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி, ஊடுகல்போடு கிராமத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 6.50 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்க ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. விழாவில் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.முருகன் கலந்து கொண்டு பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
ஒன்றியச் செயலாளா் ரகுநாத், மாவட்ட பிரதிநிதிகள் மாதேஸ்வரன், கருணாகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சக்கரவா்த்தி, நஞ்சேகவுடு, வினய், கவுன்சிலா்கள் நரசிம்மன், சோமு, முனிராஜ், தனம்ஜெயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நியாயவிலைக் கடை திறப்பு: சூளகிரி ஒன்றியம், சின்னாரன்தொட்டி, தண்ணீா்குட்லப்பள்ளியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4.50 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கட்டடத்தை எம்எல்ஏ முருகன் திறந்துவைத்து பொருள்களை வழங்கினாா்.
ஒன்றியச் செயலாளா் நாகேஷ், ஒன்றிய அவைத் தலைவா் சீனப்பகவுடு, முன்னாள் தலைவா் ராஜண்ணா, ராமச்சந்திரப்பா, சதாசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.