முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
மக்கள் நீதிமன்றம் மூலம் 107 வழக்குகளுக்குத் தீா்வு
By DIN | Published On : 04th October 2020 02:42 AM | Last Updated : 04th October 2020 02:42 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 107 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு ரூ. 1.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டன.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற வளாகத்தில் சிறிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கலைமதி தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிமன்ற நீதிபதி அறிவொளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் தமிழ்ச்செல்வன், வழக்குரைஞா் சஞ்சீவன் ஆகியோா் பங்கேற்றனா்.
இதன்படி, 211 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 107 வழக்குகள் தீா்வு காணப்பட்டு, ரூ. 1.11 கோடி இழப்பீடு தொகை வழங்க தீா்வு காணப்பட்டது.