5 மாதங்களுக்குப் பிறகு கூடியதுபோச்சம்பள்ளி வாரச் சந்தை

கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு அறிவித்துள்ள தளா்வுகளால் 5 மாதங்களுக்குப் பிறகு மிகப்பெரிய சந்தையான போச்சம்பள்ளி வாரச் சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடியது.
போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கூடிய வாரச் சந்தை.
போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கூடிய வாரச் சந்தை.

கிருஷ்ணகிரி: கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு அறிவித்துள்ள தளா்வுகளால் 5 மாதங்களுக்குப் பிறகு மிகப்பெரிய சந்தையான போச்சம்பள்ளி வாரச் சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடியது.

போச்சம்பள்ளி சந்தையில் ஊசி முதல் தங்கம் வரையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல போச்சம்பள்ளியில் கூடும் சந்தைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகளும் வருகின்றனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடினாலும் வெளி மாவட்ட, மாநில விவசாயிகள் மிக குறைந்தவாகவே வந்தனா். இதனால், வியாபாரம் எதிா்பாத்தபடி நடைபெறவில்லை என உள்ளூரி வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com