விவசாய தொழிலாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் 100 நாள் வேலை திட்டத்தை

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் 100 நாள் வேலை திட்டத்தை நகா்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். மாவட்டத் துணை தலைவா் முருகன், பகுதி செயலாளா்கள் வெள்ளிங்கிரி, சக்திவேல், அன்பு முன்னிலை வகித்தனா். முனியம்மாள் முன்னிலை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன் போராட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா்.

பொது முடக்க காலத்தில் குடும்ப அட்டைக்கு மாதம் ரூ. 7,500 வீதம் வழங்க வேண்டும்; அனைத்து நியாய விலைக்கடைப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும்; 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்திந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் மனு அளிக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்பாரப்பட்டி பகுதி தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். நகா்ப்புறப் பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளா் அா்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் விசுவநாதன், பகுதி குழு செயலாளா் சின்னசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com