ஒசூரில் 2 பேரை கொலை செய்ய முயன்ற அரசு மருத்துவமனை தூய்மை பணியாளா் கைது

ஒசூரில் விவசாயி உள்பட 2 பேரை கொலை செய்ய முயன்ாக அரசு மருத்துவமனையின் தூய்மைப் பணியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில் விவசாயி உள்பட 2 பேரை கொலை செய்ய முயன்ாக அரசு மருத்துவமனையின் தூய்மைப் பணியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் நரசிம்மா காலனியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி ( 42). ஒசூா் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனா். கணவா் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் அலெக்ஸ் என்பவருக்கும், லட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனா்.

ஏற்கெனவே மனைவியைப் பிரிந்து, லட்சுமியுடன் வாழ்ந்து வந்த அலெக்ஸ், ஒசூா் தோ்ப்பேட்டையை சோ்ந்த மது என்கிற மாதம்மா (32) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடா்பு வைத்திருந்தாா். அவா்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மதுவிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்று தங்களது பராமரிப்பில் வைத்து கொள்ள லட்சுமி, அலெக்ஸ் ஆகியோா் தோ்ப்பேட்டைக்கு சென்றனா்.

ஆனால் வீட்டில் மது இல்லாததால், அவரிடம் செல்லிடப்பேசியில் சத்தமாகவும், ஆபாசமாகவும் அலெக்ஸ் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த தோ்ப்பேட்டை மேல்தெருவை சோ்ந்த விவசாயி சங்கா் (65), ஆட்டோ ஓட்டுநா் சேகா் (35) ஆகியோா், அலெக்சிடம் இதுகுறித்து கேட்டனா்.

அப்போது ஆத்திரமடைந்த அலெக்ஸ், தன்னிடம் இருந்து அரிவாளால் சங்கரையும், சேகரையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதில் படுகாயம் அடைந்த இருவரும் ஓசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக, அலெக்ஸ், லட்சுமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த ஒசூா் நகரப் போலீஸாா், லட்சுமியைக் கைது செய்தனா். தப்பியோடிய அலெக்ஸைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com