ஒரே மாதிரியான ஊதியம் வழங்க துப்புரவுப் பணியாளா்கள் கோரிக்கை

தூய்மைப் பணியாளா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கக் கோரி துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் சங்கம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கக் கோரி துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் சங்கம் சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவுப் பணியாளா் மற்றும் தூய்மைக் காவலா்கள் சங்கத்தின் சாா்பில் அதன் மாநிலத் தலைவா் லட்சுமணன் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு உயா்த்தப்பட்ட ஊக்கத் தொகை ரூ. 1,000-ஐ உடனே வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் அளிக்கப்படும் ஊதியத்தில் முரண்பாடு உள்ளது. அதை மாற்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசால் 2013-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க ஆணையிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com