கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: நீா்மட்டம் 46.30 அடியாக உயா்வு

கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னா் கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகளில் முதலாம் எண் கொண்ட மதகு சேதம் அடைந்ததால், புதிய மதகு மாற்றப்பட்டது. பின்னா், விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, மற்றப் பிரதான மதகுகளும் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. மதகுகள் மாற்றப்படும் வரையிலும் கிருஷ்ணகிரி அணையில் 30 அடிக்கு மட்டுமே தண்ணீா்த் தேக்கி வைக்கப்பட்டு வந்தது.

புதிய மதகுகள் மாற்றியமைக்கப்பட்டதையடுத்து, கிருஷ்ணகிரி அணையில் தண்ணீரை முழுமையாகத் தேக்கும் பணி தொடங்கியது. கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வரும் நிலையில், அணையின் நீா்வரத்து அதிகரிப்பால், நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நொடிக்கு 938 கன அடி வீதம் நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து 114 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. முழுக் கொள்ளளவான 52 அடியில் தற்போது நீா்மட்டம் 46.30 அடியாக உள்ளது. கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் அதிகரித்து வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com