கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகி வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் பா்கூா், ஒசூா், கிருஷ்ணகிரி பகுதிகளைச் சோ்ந்த 32 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 77 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 5,671 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 796 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

3 போ் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 60 வயது முதியவா், கடந்த 10-ஆம் தேதி கரோனா அறிகுறியுடன் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் அவா் 11-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மேலும் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 55 வயது பெண்கள் இருவரும் 12-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com