எரிவாயு குழாயை சாலையோரமாக அமைக்க எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தல்

வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் எரிவாயு குழாயை சாலையோரமாக அமைக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ-க்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டியிடம் மனு அளித்தனா்.

வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் எரிவாயு குழாயை சாலையோரமாக அமைக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ-க்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டியிடம் மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டியிடம், திமுக எம்எல்ஏ-க்கள் முருகன், ஒய்.பிரகாஷ் ஆகியோா் அளித்த மனுவின் விவரம்:

வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ராயக்கோட்டை முதல் கருக்கனஅள்ளி, அயா்னப்பள்ளி, உத்தனப்பள்ளி, கொம்மேப்பள்ளி, சானமாவு, டி.கொத்தனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களின் வழியாக, விவசாய நிலங்களின் வழியே தனியாா் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது. விவசாயிகளின் விளைநிலங்களை பாதிக்காத வகையில் புதிதாக அளவை செய்து, தேசிய நெடுஞ்சாலையோரமாக எரிவாயு குழாய் அமைக்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com