கிருஷ்ணகிரியில் திமுக செயற்குழுக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், அதன் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் நாகராஜ், சந்திரன், சாவித்திரி கடலரசு மூா்த்தி, மாவட்டப் பொருளாளா் ராஜேந்திரன், நகரச் செயலாளா் நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்கும் முப்பெரும் விழாவில் கட்சியின் மூத்த முன்னோடிகள் 200 பேருக்கு பொற்கிழி வழங்கி கெளரவிப்பது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெற வலியுறுத்துவது, தமிழ்நாட்டில் பட்டியலினத்தவா்களுக்கு நிகழ்ந்து வரும் கொடுமைகள் குறித்து, விசாரணை நடத்தி, தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தீா்மானண் நிறைவேற்றப்பட்டன. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சிகள், வாா்டுகள் தோறும் முகாம்கள் அமைத்து, உடனடியாக தொகுதிக்கு 10 ஆயிரம் உறுப்பினா்களைச் சோ்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com