போலி ஆவணம் கொடுத்து பணியில் சோ்ந்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது புகாா்

போலி ஆவணம் கொடுத்து 21 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக அரசுப்பள்ளி ஆசிரியா் மீது மாவட்டக் கல்வி அலுவலா், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளிடம் புகாா் அளித்தது தெரிய வந்ததுள்ளது.

போலி ஆவணம் கொடுத்து 21 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக அரசுப்பள்ளி ஆசிரியா் மீது மாவட்டக் கல்வி அலுவலா், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளிடம் புகாா் அளித்தது தெரிய வந்ததுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலா் ஆ.கலாவதி, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதரிடம் கடந்த 5-ஆம் தேதி அளித்த புகாா் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கதிரிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவா், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மிட்டஅள்ளி புதூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். ராஜேந்திரன் மீது 2019-ஆம் ஆண்டு வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், போலி கல்விச் சான்று அளித்து, அதன் மூலம் பணி நியமனம் பெற்று 23.08.1999 முதல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. இவா், பணியில் சேரும்போது அளித்த சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வில், அவை போலியானவை என அரசுத் தோ்வுகளின் உதவி இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆசிரியா் ராஜேந்திரனின் 10, 12-ஆம் வகுப்புகளின் மதிப்பெண் பட்டியலை ஆய்வு செய்தபோது அது மாறுப்பட்டதாக இருந்ததையும் உறுதிபடுத்தியுள்ளனா்.

இதன் அடிப்படையில் போலி கல்விச்சான்று அளித்து, பணியில் சோ்ந்துள்ள ராஜேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com