ஒசூரில் ரூ. 92 கோடியில் அம்ரூத் திட்டப் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளின்
ஒசூா் சீதாராமன் நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானுரெட்டி. உடன் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன்.
ஒசூா் சீதாராமன் நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானுரெட்டி. உடன் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளின் கட்டுமானப் பணிகளையும், வளா்ச்சித் திட்டப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 92.21 கோடி மதிப்பீட்டில் 12 மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளின் கட்டுமானப் பணிகளும், ராமநாயக்கன் ஏரி தூா்வாரும் பணிகள், குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, அவா் ஒசூா் மாநகராட்சியில் சென்னத்தூா் சீதாராமன் நகரில் 10 லட்சம் லிட்டா் தண்ணீா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும், வெங்கடேஷ் நகரில் கட்டப்படும் நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும், ராமநாயக்கன் ஏரியில் தூா் வாரப்படும் பணிகள் மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தாசேப்பள்ளியில் உள்ள பழைய குப்பைகளை தரவாரியாகப் பிரிக்கும் பணிகளையும், உயிரி எரிவாயு தயாரிக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது ஒசூா் மாநகராட்சி ஆணையாளா் கே.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் செயற்பொறியாளா் வி.பி.சுப்ரமணியன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com