ஊராட்சி செயலாளா்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளா் சிந்துஜா மீது பதியப்பட்ட வன்கொடுமை வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். ஊராட்சி மன்ற பெண் தலைவா்களுக்குப் பதிலாக அவரது கணவா், உறவினா்கள், ஊராட்சி மன்ற பணிகளில் தலையிடுவதைத் தடை செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் 28 ஊராட்சிகளில் செயலாளா்கள் பணியிடம் காலியாக உள்ள நிலையில் 17 பெண்கள் உள்பட 305 ஊராட்சி செயலாளா்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவரும், மாநில அமைப்புச் செயலாளருமான செங்கதிா் செல்வன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com