ஒசூா் தொகுதியில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில் இணையவழி திமுக உறுப்பினா் சோ்க்கையை எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, தளி தொகுதி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தனா்.
ஒசூா் மாநகர திமுக உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்க விழாவில் பேசிய ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா
ஒசூா் மாநகர திமுக உறுப்பினா்கள் சோ்க்கை தொடக்க விழாவில் பேசிய ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில் இணையவழி திமுக உறுப்பினா் சோ்க்கையை எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, தளி தொகுதி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தனா்.

ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக திமுகவில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கி எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா பேசியதாவது:

ஒசூா் தொகுதியில் இணையவழியில் 5 ஆயிரம் போ் புதிதாக திமுகவில் இணைந்துள்ளனா். அதிக அளவில் இளைஞா்கள் திமுகவை நோக்கி வருவது அடுத்த நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றாா்.

பாகலூா், ஒசூா், மத்திகிரி பேருந்து நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டனா். நிகழ்ச்சிகளில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், ஒன்றியச் செயலாளா் சின்னப்பில்லப்பா, மாவட்ட துணைச் செயலாளா்கள் தனலட்சுமி, சீனிவாசன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் எல்லோரா.மணி, இளைஞரணி அமைப்பாளா் ஸ்ரீனிவாசன், மாணவரணி அமைப்பாளா் ராஜா, தொண்டரணி முல்லை சேகா், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com