ஒசூா் சோதனைச் சாவடியில் ரூ. 2.14 லட்சம் பணம் பறிமுதல்

ஒசூா், சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒசூா்: ஒசூா், சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா்-சிப்காட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது மேஜைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

தமிழக-கா்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், சூசூவாடி என்ற இடத்தில் வெளி மாநிலங்களிலிருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதனையிடவும், தற்காலிக அனுமதி வழங்கவும் சோதனைச் சாவடி உள்ளது.

அதேபோல, சற்றுத் தொலைவில் சிப்காட் வளாகத்தின் அருகே தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்யவும், தற்காலிக அனுமதி வழங்கவும் ஒரு சோதனைச் சாவடி உள்ளது.

நாட்டிலேயே இரு மாநிலங்களுக்கு இடையே அதிகபட்சமான வாகனங்கள் இடம் பெயருவது இந்த இரு சோதனைச் சாவடிகள் வழியாகத்தான். ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்கின்றன.

கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன், ஆய்வாளா் முருகன் தலைமையில் ஒரு குழுவினா் சனிக்கிழமை அதிகாலை ஒசூரில் சோதனைச் சாவடிகளுக்குச் சென்றனா்.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் நுழையக்கூடிய சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 பணத்தை மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனா். இரவு பணிக்கு வந்த சில மணி நேரங்களில் இந்த சோதனைச் சாவடியில் இருந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் வாங்கியுள்ள கணக்கில் வராத பணம் இது என லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கண்டறிந்தனா்.

இதையடுத்து இந்தச் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் சுப்புரத்தினம், உதவியாளா் ராமலிங்கம் இருவரிடமும் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com