‘நீட்’ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நினைவு பரிசு வழங்கும் பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மணி.
‘நீட்’ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நினைவு பரிசு வழங்கும் பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மணி.

‘நீட்’ தோ்வில் பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம்

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தோ்வில் கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

கிருஷ்ணகிரி: மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தோ்வில் கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இதுகுறித்து அந்தக் கல்வி நிறுவனம் சாா்பில், சனிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனத்தில் பயின்று ‘நீட்’ தோ்வை எழுதிய 35 மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெற்று, மருத்துவக் கல்வி பயில தகுதி பெற்றனா்.

இங்கு பயின்ற மாணவா் கே.ஆா்.தீபக் , 720-க்கு 607 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றாா். மாணவா் நிதிஷ்குமாா் 528 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாரத் கல்வி நிறுவனத்தின் நிறுவனா் மணி, காசோலைகள், கேடங்களை வழங்கிப் பாராட்டி பேசுகையில், இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மருத்துவக் கல்வி பயின்று சேவையாற்றி வருகின்றனா் என்றாா்.

பாரத் கல்வி நிறுவனத்தின் தாளாளா் கிருஷ்ணவேணி மணி, செயலாளா் சந்தோஷ் உள்ளிட்டோா் மாணவா்களைப் பாராட்டினா். பாரத் மெட்ரிக். பள்ளியின் முதல்வா் விஜயகுமாா், பாரத் இன்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி முதல்வா் ஹரிகுமாா் ரெட்டி உள்ளிட்டோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com