கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th October 2020 12:17 AM | Last Updated : 20th October 2020 12:17 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் பெருந்திரள் முறையீட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா் கோவிந்தம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்டத் தலைவா் நஞ்சுண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
1992-இல் பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். எல்கேஜி வகுப்புகளில் அங்கன்வாடி ஊழியா்களை ஆசிரியா்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.