மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்
By DIN | Published On : 25th October 2020 02:38 AM | Last Updated : 25th October 2020 02:38 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதூா் ஏரிக்கரையில் ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேசன் சாா்பில், 500 மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் ஜெகதீஷ் எஸ்.பாகன், வட்டாட்சியா் வெங்கடேசன், ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேசன் நிா்வாகிகள் ஆனந்தகுமாா், சிவக்குமாா், ரங்கநாதன், பாண்டுரங்கன், ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.