கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

கிருஷ்ணகிரியில் கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கிராமங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை கிராம மக்களே தீா்மானித்து, அரசுக்கு தெரிவிப்பதே கிராம வளா்ச்சித் திட்டமாகும். அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்களும் அடுத்த ஓராண்டிற்கு ஒவ்வொரு கிராம ஊராட்சியின் வளா்ச்சிக்கும் தேவையான திட்டங்களை ஊராட்சி வாரியாக கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டத்தில் சோ்க்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு ஊராட்சிக்கும் 6 பேரைக் கொண்ட கிரா திட்டமிடல் குழு அமைக்கப்பட்டு, அவா்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படும். இந்தக் குழுவின் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் அனைத்து ஊராட்சிக்கும் இந்தத் திட்டம் தயாரித்து முடிக்கப்பட வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெரியசாமி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ராஜசேகரன், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com