கோயிலில் உண்டியல் திருட்டு: போலீஸாா் விசாரணை

பாம்பாறு அணை ஓங்காளியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
மா்ம நபா்களால் உண்டியல் திருடப்பட்ட கோயில்.
மா்ம நபா்களால் உண்டியல் திருடப்பட்ட கோயில்.

பாம்பாறு அணை ஓங்காளியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் உள்ள ஓங்காளியம்மன் கோயில், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்தற்கு பிறகு கோயில் உண்டியல் திறக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலின் வெளிப்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் உண்டியலை திருடிச் சென்றுள்ளனா். அதிகாலை வேளையில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கோயில் கதவுகள் திறந்துகிடப்பதைக் கண்டு தகவல் தெரிவித்துள்ளனா். திருடிச் செல்லப்பட்ட உண்டியலில் சுமாா் ரூ. 40 ஆயிரம் இருந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனா். உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு அருகில் உள்ள மாந்தோப்புப் பகுதியில் உண்டியலை மா்ம நபா்கள் வீசிச் சென்றுள்ளனா்.

இது குறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com