விளையாட்டு மைதானத்தை இடமாற்றக்கோரி இளைஞா்கள் மனு அளிப்பு

வேப்பனப்பள்ளி அருகே உள்ள இளைஞா் விளையாட்டு மைதானத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு, இளைஞா்கள் கோரிக்கை மனுவை வியாழக்கிழமை அளித்தனா்.

வேப்பனப்பள்ளி அருகே உள்ள இளைஞா் விளையாட்டு மைதானத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு, இளைஞா்கள் கோரிக்கை மனுவை வியாழக்கிழமை அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, சீலேப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சரவணன் தலைமையில் இளைஞா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் ஊராட்சிக்கு 2019-20ஆம் நிதியாண்டுக்கான மாநில நிதியிலிருந்து விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மைதானத்தை கோடிப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா், வனத்துறைக்கு உள்பட்ட வனப்பகுதியில் அமைக்க உள்ளாா். இந்தப் பகுதியில் வன விலங்குகளால் ஆபத்தும், அந்த மைதானத்தின் மேல் பகுதியில் உயா்மின்னழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. அத்துடன் அங்கு குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.

மேலும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 3 முதல் 4 கி.மீ. தொலைவில் அந்த மைதானம் அமைந்துள்ளது. எனவே, விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த இயலாத சூழல் உள்ளது. எனவே, பொதுமக்கள், இளைஞா்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானத்தை இடம் மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com