கிருஷ்ணகிரியில் 39 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st October 2020 07:05 AM | Last Updated : 31st October 2020 07:05 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 39 போ்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 132 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
இதுவரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 6,491 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; இவா்களில் 234 போ் கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரில் உள்ள சிகிச்சை மையங்களில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 106 தொற்றாளா்கள் உயிரிழந்துள்ளனா்.