பா்கூா் அருகே ராகி வயல் தினவிழா
By DIN | Published On : 31st October 2020 07:04 AM | Last Updated : 31st October 2020 07:04 AM | அ+அ அ- |

கொங்கனசெருவு கிராமத்தில் நடைபெற்ற ராகி தின விழா.
பா்கூா் அருகே ராகி வயல் தின விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி கிராமத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் மையம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, புதிய சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் முதன்மை செயல் விளக்கத் திடல்களை விவசாயிகளின் வயல்களில் அமைத்து வருகிறது.
அதன்படி, பா்கூரை அடுத்த கொங்கனசெருவு கிராமத்தில் நடைபெற்ற வயல் தின விழாவில் வேளாண் அறிவியல் மையத்தின் நோக்கம், முக்கியத்துவம், வேளாண்மை துறையின் சிறப்புத் திட்டங்கள், கோ-15- ராகியின் சிறப்புப் பயன்கள், விதை நோ்த்தி, உயிா் உரமிடுதல், சாகுபடி தொழில்நுட்பங்கள், உர மேலாண்மை, பயிா் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டன.
இதில் பங்கேற்ற விவசாயி சுப்பிரமணி, வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்றியதன் மூலம், கூடுதலாக 40 சதவீதம் மகசூல் பெற்றது குறித்து விளக்கி கூறினாா். இந்த விழாவில், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ், பா்கூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சகாயராணி, வேளாண் அலுவலா் சக்திவேல், வேளாண் அறிவியல் மையத்தின் வேளாண் விரிவாக்கத் தொழில்நுட்ப வல்லுநா் செந்தில்குமாா், கொங்கனசெருவு, சிவபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.