நெல் பயிரில் பாக்டீரியல் இலைகருகல் நோயும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி அறிவுரை வழங்கியுள்ளாா்.

நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி அறிவுரை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நிலவும் சீதோஷ்ண நிலையில் நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோயின் தாக்குதல் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது.

இலைப்பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும்.

இலைகளின் ஓரங்களில் மஞ்சள் கலந்த வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் நீளவாக்கில் பாதிப்பு காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும், சுருண்டும் காணப்படும்.

இவ்வாறு இருந்தால், விவசாயிகள் 3 சதவீத வேப்ப எண்ணெய் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டையிலிருந்து எடுத்த சாற்றைத் தெளிக்க வேண்டும்.

ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் மற்றும் காப்பா் ஆக்சிகுளோரைடு 1.25 கிலோ என ஹெக்டேருக்கு கலந்து தெளிக்க வேண்டும்.

நோயின் தீவிரம் அதிகம் காணப்பட்டால் 15 நாள்கள் இடைவெளியில் மறுமுறையும் மேற்கண்ட மருந்துகளைத் தெளித்தால், இந்த பாக்டீரியல் இலைக்கருகல் நோயின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com