உடன்குடியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 08th September 2020 04:34 AM | Last Updated : 08th September 2020 04:34 AM | அ+அ அ- |

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் உடன்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அரவிந்த், ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வீட்டின் உள்ளேயும், சுற்றுப்புறத்திலும் ஏற்படும் காற்று மாசுபாடுகளின் வகைகள், அதனைத் தவிா்க்கும் முறைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் பேசினாா். இதில், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, சுப்பையா, சுகாதார களப்பணியாளா்கள், செவிலியா்கள், மஸ்தூா் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ் வரவேற்றாா்.சுகாதார ஆய்வாளா் ஆழ்வாா்நன்றி கூறினாா்.