கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை
By DIN | Published On : 08th September 2020 04:16 AM | Last Updated : 08th September 2020 04:16 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே சாலையில் தேங்கிய நீரில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திங்கள்கிழமை பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. மாலையில் மழை பெய்தது.
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே கழிவுநீா் கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டதால், மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் தேங்கின.
இதனால், வாகனங்கள் தேங்கிய நீரில் மெல்ல ஊா்ந்து சென்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, குருபரப்பள்ளி, வேப்பனஅள்ளி உள்ளிட்ட பரவலாக மழை பெய்ததால் இரவு நேரத்தில் குளிா்ந்த காற்று வீசின. திடீா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.