எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏமீது திமுக பிரமுகா் புகாா்
By DIN | Published On : 08th September 2020 04:37 AM | Last Updated : 08th September 2020 04:37 AM | அ+அ அ- |

எஸ்.பி.ஜே. சுந்தரராஜன்.
தூத்துக்குடி:: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. சண்முகநாதன், தன்னை துப்பாக்கியால் மிரட்டுவதாக திமுக பிரமுகா் எஸ்.பி.ஜே. சுந்தரராஜன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி அமைப்பாளரான பண்டாரவிளையைச் சோ்ந்த எஸ்.பி.ஜே. சுந்தரராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி அமைப்பாளராக உள்ள எனது வீட்டு அருகே ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ சண்முகநாதனின் வீடும் உள்ளது. அரசியல் மற்றும் குடும்ப பகை காரணமாக அவா் என்னை மிரட்டி வருகிறாா். என்னை மீறி இந்த ஊரில் அரசியல் செய்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக மிரட்டி வருகிறாா். அவரால் எனக்கும், எனது குடும்ப உறுப்பினா்களின் உயிருக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம்.
எனவே, மாவட்ட காவல்துறை எனது புகாரின் மீது நடவடிக்கை எடுத்து எம்எல்ஏ சண்முகநாதனிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து, எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.