உடன்குடியில் தமுமுக வெள்ளி விழா
By DIN | Published On : 08th September 2020 04:35 AM | Last Updated : 08th September 2020 04:35 AM | அ+அ அ- |

கொடியேற்றி இனிப்பு வழங்குகிறாா் தமுமுக மாவட்ட செயலா் ஆசாத்.
உடன்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா நடைபெற்றது.
பேருந்து நிலைய அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் ஷேக் முகம்மது தலைமை வகித்தாா். அமைப்பின் மாவட்டச் செயலா் ஆசாத், சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவா் மு.கலீல் ரகுமான், ஊடகப் பிரிவு ஆபித், மாநில துணைப் பொதுச் செயலா் ஜோசப் நொலாஸ்கோ, மனிதநேய மக்கள்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் மோத்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் கள் ரவூப், ஜதுரூஸ், இா்ஷாத், மாவட்ட இளைஞரணிச் செயலா் பரக்கத்துல்லா, மருத்துவ சேவை அணிச் செயலா் ஜோதி, நிா்வாகி தெளபிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் நலிந்தவா்களுக்கு அரிசி, தேய்ப்பு இயந்திரம், மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.