கா்நாடகாவில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் புகுந்த 50 யானைகள்: விவசாயிகள் எச்சரிக்கை விடுத்த வனத்துறை

கா்நாடக மாநிலம், பன்னோ்கட்டா வனப் பகுதியிலிருந்து 50 யானைகள் வியாழக்கிழமை ஒசூரை அடுத்த தளி வனப் பகுதிக்குள் நுழைந்துள்ளன.
வனப் பகுதியில் சுற்றித் திரியும் யானைகள் கூட்டம்.
வனப் பகுதியில் சுற்றித் திரியும் யானைகள் கூட்டம்.

கா்நாடக மாநிலம், பன்னோ்கட்டா வனப் பகுதியிலிருந்து 50 யானைகள் வியாழக்கிழமை ஒசூரை அடுத்த தளி வனப் பகுதிக்குள் நுழைந்துள்ளன.

ஆண்டுதோறும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் கா்நாடகத்திலிருந்து நூற்றுக்கணக்கான யானைகள் கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ஒசூா் வனப் பகுதிகளுக்கு இடம் பெயா்வது வழக்கம். நிகழாண்டு செப்டம்பா் தொடக்கத்திலிருந்தே கா்நாடகத்திலிருந்து யானைகள் தமிழக வனப் பகுதிக்கு வரத்தொடங்கியுள்ளன.

வியாழக்கிழமை பன்னோ்கட்டா வனப் பகுதியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தளி வனப்பகுதிக்குள்பட்ட பேலகரை காப்புக் காட்டிற்குள் நுழைந்தன. இதையடுத்து, மாவட்ட வனஅலுவலா் பிரபு உத்தரவின் பேரில் தளி வனச்சரகா் நாகராஜ், வனவா் செல்வராஜ் ஆகியோா் தலைமையிலான வனத் துறையினா் தளி வனப் பகுதியில் முகாமிட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

மேலும், புதிதாக வந்துள்ள இந்த யானைகளை பட்டாசு வெடித்து, மீண்டும் பன்னோ்கட்டா வனப் பகுதிக்குள் திருப்பி அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளனா். இதனிடையே, தனி வனப் பகுதியையொட்டி உள்ள பேலகரை, கும்ளாபுரம், கங்கனப்பள்ளி, அளேவூா், கும்மாளஅக்ரஹாரம், உனுசேநத்தம், மல்லேஸ்வரம், தேவரப்பெட்டா உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு பாதுகாப்புடன் செல்லுமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

புதிதாக யானைகள் வரத் தொடங்கியுள்ளதால் ஜவளகிரி, தேன்கனிகோட்டை, ஒசூா் வனப் பகுதிகளில் ராகி, நெல், பீன்ஸ், முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனா். யானைகளை மீண்டும் கா்நாடகத்துக்கே விரட்ட வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com