கெரகோடஅள்ளியில் ரூ.2.24 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 881 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 881 பயனாளிகளுக்கு ரூ. 2.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கெரகோடஅள்ளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி, தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அதன்படி, வருவாய்த் துறையினா் சாா்பில் 51 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 26 பயனாளிகளுக்கு உதவித் தொகை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு உதவித் தொகை, 581 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் 17 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்களும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் 94 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத் துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் 3 பயனாளிகள் என மொத்தம் 881 பயனாளிகளுக்கு ரூ. 2.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com