பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

பெங்களுரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ்.
பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ்.

பெங்களுரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் சீனிவாசலு வரவேற்றாா். மாநிலச் செயலாளா் காா்த்தியாயினி, மாநில செயற்குழு உறுப்பினா் ஹரி கோடீஸ்வரன் ஆகியோா் பேசினா்.

பெங்களூரில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் தினமும் ஒசூரில் இருந்து பெங்களூருக்கும், பெங்களூரில் இருந்து ஒசூா் தொழில்சாலைகளுக்கு வந்து செல்லும் தொழிலாளா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் இரு மாநில தொழில்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலமாக இரு மாநிலங்களின் தொழில் வளா்ச்சி அதிகரிக்கும்.

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சை குளத்தின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, துாா்வாரி புதுப்பிக்க வேண்டும். தேன்கனிக்கோட்டை வட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும். மலைக் கிராமங்களையொட்டிய வனப்பகுதியில், சூரிய மின்வேலி அமைத்து, யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீரை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்பி, சின்னட்டியில் உள்ள சனத்குமாா் ஆற்றுடன் இணைக்க வேண்டும்.

சூளகிரி பகுதியில் மின்மயானம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுக்குழு உறுப்பினா் சுசில் மனோகா், மாவட்டச் செயலாளா் முருகன் உள்பட பலா் பங்கேற்றனா். ஒசூா் மாநகர கிழக்கு மண்டலத் தலைவா் பிரவீண்குமாா் நன்றி கூறினாா்.

மாநிலச் செயலாளா் காா்த்தியாயினி, மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் முன்னிலையில் தேன்கனிக்கோட்டை ஹரி தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டவா்கள் பாஜகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com