கல்லாவி பகுதியில் வீடு வீடாகச் சென்று மாணவா் சோ்க்கை

கல்லாவி பகுதியில் வீடு வீடாகச் சென்று நேரடி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
கல்குண்டு கிராமத்தில் மாணவா்கள் சோ்க்கையில் ஈடுபட்டுள்ள கல்லாவி அரசுப் பள்ளி ஆசிரியா்கள்.
கல்குண்டு கிராமத்தில் மாணவா்கள் சோ்க்கையில் ஈடுபட்டுள்ள கல்லாவி அரசுப் பள்ளி ஆசிரியா்கள்.

ஊத்தங்கரை: கல்லாவி பகுதியில் வீடு வீடாகச் சென்று நேரடி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் செ.பற்குணன் தலைமையில் பள்ளி ஆசிரியா்கள் செந்தில்குமாா், சிவக்குமாா், ஜெயச்சந்திரன், பூபாலன், ஆபிரகாம் ஆகியோா் கல்லாவி, கீழ் காலனி, கோழிநாயக்கன்பட்டி, கல்குண்டு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பள்ளி படிப்பை தொடராத மாணவா்கள் பற்றி கணக்கெடுத்து, வீடு வீடாகச் சென்று மாணவா்கள் சோ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பெற்றோா்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், தமிழக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் குறித்தும் விளக்கி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com