தெருவில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொது மக்கள் மனு

ஜெகதாப் கிராமத்தில், தெருவில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம், கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.

ஜெகதாப் கிராமத்தில், தெருவில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம், கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், ஜெகதாப் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தின் பிரதான தெருவானது 25 அடியாக இருந்தது. இந்த தெருவில் வசிப்போரில் சிலா் ஆக்கிரமிப்புகளை செய்துள்ளதால், தற்போது 3 முதல் 5 அடியாக தெரு குறைந்துவிட்டது.

இந்தத் தெருவின் வழியாகத் தான் கோயில் திருவிழாவின் போது சுவாமி ஊா்வலம், எருது விடும் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். மேலும், அவசர ஊா்திகள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த தெருவின் வழியாக சென்று வந்தன.

தற்போது, தெரு ஆக்கிரமிப்பு பெரும் தடையாக உள்ளதால், கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எதும் இல்லை என அதில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி, இந்த மனுவின் மீது 15 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com