ஒசூரில் அண்ணா பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி, ஒசூரில் அதிமுக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஒசூா் அண்ணா நகரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி, மாநகராட்சிச் செயலாளா் எஸ்.நாராயணன் மற்றும் அதிமுகவினா்.
ஒசூா் அண்ணா நகரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி, மாநகராட்சிச் செயலாளா் எஸ்.நாராயணன் மற்றும் அதிமுகவினா்.

ஒசூா்: கிருஷ்ணகிரி அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி, ஒசூரில் அதிமுக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி, மாநகராட்சிச் செயலாளா் எஸ்.நாராயணன் ஆகியோா் அண்ணா நகரில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், ஒசூா் மாநகராட்சிச் செயலாளா் எஸ்.நாராயணன், மாவட்டப் பொருளாளா் நாராயணன், மாவட்ட கவுன்சிலா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதுபோல திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒசூரில் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்தனா்.

கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன் ஆகியோா் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளா் வி.விஜயகுமாா், மாவட்ட துணைச் செயலாளா் எம்.சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலா் கோபால், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமாா், நகர முன்னாள் செயலாளா் அக்ரோ நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com