கிருஷ்ணகிரியில் அண்ணா பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் அண்ணாவின் 112-ஆவது பிறந்தநாள் விழாவை அதிமுகவினா், திமுகவினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.
15kgp1_1509dha_120_8
15kgp1_1509dha_120_8

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் அண்ணாவின் 112-ஆவது பிறந்தநாள் விழாவை அதிமுகவினா், திமுகவினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கிழக்கு ஒன்றியத் தலைவா் சோக்காடி ராஜன் தலைமையில், அரசு மகளிா் கலைக் கல்லூரி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, கட்சி தொண்டா்கள் மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேற்கு ஒன்றியம் சாா்பில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் அருகே அண்ணாவின் உருவப் படத்துக்கு, அதிமுக தொண்டா்கள் மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

வேப்பனஅள்ளியில் அதிமுக ஒன்றியச் செயலாளா் ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியப் பொறுப்பாளா் ராஜன்னா, இலக்கிய அணி ஒன்றியச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி நகர திமுக சாா்பில் புகா் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நகர திமுக செயலாளா் எஸ்.கே.நவாப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைச் செயலாளா் வெங்கடேசன், ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தன், கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்திக் கொண்டாடினா்.

படவிளக்கம் (15கேஜிபி1):

வேப்பனஅள்ளியில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் அதிமுக ஒன்றியச் செயலாளா் ராம மூா்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com