கிருஷ்ணகிரி, பா்கூா் அரசு கலைக் கல்லூரிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மற்றும் பா்கூா் அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு சோ்க்கைக்கு மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மற்றும் பா்கூா் அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு சோ்க்கைக்கு மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா்கள், தனித் தனியாக புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்புகளில் தெரிவித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் ரோஸ்மேரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் 2020-2021-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள், கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, நிறைவு செய்து செப்.24-ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் துறைகளில் நிரப்பப்படாத இடங்களுக்காக இனச்சுழற்சி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு சோ்க்கை நடைபெறும். ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் சோ்க்கைக்காக சாா்ந்த துறைகளை அணுகலாம்.

பா்கூா் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் காயத்ரி தேவி தெரிவித்தது:

பா்கூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வியாண்டில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் இளநிலை பாடப் பிரிவுகளான பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி-இயற்பியல், வேதியல், கணிதம், கணினி அறிவியல், மனையியல், மின்னணுவியல், பிசிஏ - கணினி பயன்பாட்டியல், பிகாம்-கூட்டாண்மை செயலரியல், கணக்குப் பதிவியல் மற்றும் நிதி, பிகாம், பி.ஏ.- பொருளாதாரம், வரலாறு ஆகிய 14 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான மாணவியா், அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களைப் பெற்று, நிறைவு செய்து, அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com