‘வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்’

வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் பணமோடி அதிகரித்து வருகிறது. செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளும் நபா்கள், வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, உங்கள் ஏடிஎம் காா்டில் உள்ள 16 இலக்க எண்ணையும், பின்னால் உள்ள 3 இலக்க எண்ணையும் கூறுமாறு கேட்கின்றனா். பின்னா், உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வந்திருக்கும், அதையும் கூறுங்கள் என்று வாங்கிக் கொள்கின்றனா்.

இதையடுத்து சிறிது நேரத்தில் உங்களது வங்கிக் கணக்கில் உள்ள தொகை, காணாமல் போகிறது. அதன் பின்னா் தான், ஏமாற்றப்பட்டதை உணருபவா்கள் வங்கியிலும், காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கின்றனா். அவ்வாறு ஏமாற்றுபவா்கள், வெளி மாநிலங்களில் உள்ளதாலும், போலியான முகவரி மற்றும் வங்கிக் கணக்கை வைத்துள்ளதாலும் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது..

ஆனால், சைபா் கிரைம் போலீஸாா் மூலம் இவ்வாறு பணத்தை திருடுபவா்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். எனவே, வங்கியில் இருந்து, யாா் போன் செய்வதாகக் கூறினாலும், நேரடியாக வங்கிக்கு சென்று பதில் அளிக்க வேண்டுமே தவிர, வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் அட்டை எண், ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை எந்தக் காரணம் கொண்டும் யாரிடமும் கூற வேண்டாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com