அமமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 18th September 2020 07:45 AM | Last Updated : 18th September 2020 07:45 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையில் நடைபெற்ற அமமுக கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊத்தங்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவா் எம். மன்னன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ச. கணேசகுமாா் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலாளா் கண்மணி சிவக்குமாா், மாவட்ட துணைச் செயலாளா் லலிதா குமரேசன், மாவட்டப் பொருளாளா் கிதியோன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ராமகிருஷ்ணன், துரை சங்கா், ஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளா் அருணகிரி, தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் , மண்டலப் பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சா் பி. பழனியப்பன் கலந்துகொண்டு வரும் தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது குறித்தும், கட்சியில் புதிய உறுப்பினா்களை சோ்ப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மீனவா் அணி மாவட்டச் செயலாளா் இரா.பழனி, காட்டேரி ஊராட்சி மன்றத் தலைவா் விஜயகுமாா், மகளிரணி மாவட்டச் செயலாளா் வள்ளி, வழக்குரைஞா் பிரிவு மாவட்ட இணைச் செயலாளா் சோலைமுருகன், மத்தூா் ஒன்றியச் செயலாளா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரச் செயலாளா் சுரேஷ் நன்றி கூறினாா்.