கிருஷ்ணகிரியில் தேசிய ஊட்டச்சத்து விவசாயக் கருத்தரங்கு
By DIN | Published On : 19th September 2020 06:27 AM | Last Updated : 19th September 2020 06:27 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி, செப். 18: கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் மற்றும் விவசாயக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சை கிராமத்திலுள்ள ஐசிஏஆா் - வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா், முதுநிலை விஞ்ஞானி தோ.சுந்தரராஜ் தலைமை வகித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் செந்தில்குமாா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் ஜோதிலட்சுமி, நித்யா, புள்ளியல் ஆய்வாளா் சீனிவாசன், வேளாண் அறிவியல் மையத்தின் தோட்டக்கலைத் தொழில்நுட்ப அலுவலா் ரமேஷ் பாபு, மனையியல் தொழில்நுட்ப அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்தரங்கில் ஊட்டச்சத்து மாதத்தின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து மற்றும் சமசீா் உணவின் அவசியம், மகளிருக்கு தேவையான ஊட்டச்சத்துகள், அவற்றை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துகள், ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பது, அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கலந்தாய்வில் பங்கேற்றோருக்கு காய்கறி விதைத் தொகுப்பு, முருங்கை நாற்றுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அங்கன்வாடி பணியாளா்கள் பண்ணை மகளிா் பங்கேற்றனா்.