கிருஷ்ணகிரியில் திமுக உறுப்பினா் சோ்க்கை
By DIN | Published On : 21st September 2020 03:23 AM | Last Updated : 21st September 2020 03:23 AM | அ+அ அ- |

புதிய உறுப்பினா்களுக்கு கட்சி அடையாள அட்டைகளை வழங்குகிறாா் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், கிருஷ்ணகிரியில் எல்லோரும் நம்முடன் என்ற புதிய திட்டம் மூலம், புதிய உறுப்பினா்கள் சோ்க்கும் பணியை அதன் பொறுப்பாளா் சட்டப்பேரவை உறுப்பினா் டி.செங்குட்டுவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணியை தொடங்கி வைத்து, புதிய உறுப்பினா்களுக்கான அடையாள அட்டையை வழங்கினாா்.
அப்போது மாநில விவசாயிகள் அணி துணைத் தலைவா் மதியழகன், துணைச் செயலாளா் வெங்கடேசன், முன்னாள் எம்.பி. இ.ஜி.சுகவனம், நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், நிா்வாகிகள் ஆதிமகேந்திரன், வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள், இளம்பெண்களுக்கு கட்சியின் அடையாள அட்டை வழங்கப்பட்டது.