கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேலுப்பள்ளியில் ரூ. 338.95 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தாா்.

தரைத்தள மேற்கூரைக் கட்டுமானப் பணிகள், தரைத் தளத்தில் அமையக் கூடிய உடல்கூறு மையம், வகுப்பறைகள், அருங்காட்சியகம், உடல்கூறு ஆய்வு விளக்க அறை, விலங்குகள் சோதனை மையம், எம்.ஆா்.ஸ்கேன் மையம், ரேடியாலாஜி மையம், மைக்ரோ ஆய்வகம், நோயியல் மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களின் கட்டுமானப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் பொது சிகிச்சை மையம், கரோனா நோய்த் தொற்று சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், விஷமுறிவு மையம் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தாா்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தொற்றாளா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், இறப்பு விகிதம் குறையும் வகையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவா்களை ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துச்செல்வன், நலப் பணிகள் இணை இயக்குநா் பரமசிவன், உள்ளிருப்பு மருத்துவா் ஸ்ரீதா், மகப்பேறு மருத்துவா் செல்வி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் மகாவிஷ்ணு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com