மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களுக்கு ஐவிடிபி நிவாரண உதவி

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு, ஐவிடிபி தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள்.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு, ஐவிடிபி தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஐவிடிபி தொண்டு நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று மற்றும் அதனால் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து வீட்டில் முடங்கினா். இத்தகைய நிலையில், கடந்த மாதம் பெய்த பெரு மழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோா் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா்.

அவ்வாறு பாதிக்கப்பட்டோா் மீண்டும் இயல்வு நிலைக்கு திரும்பும் வகையில் உதவிகள் வேண்டி நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்று, ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் ரூ. 2 லட்சம் மதிப்பிலான 500 மண்ணெண்ணெய் அடுப்புகள், ரூ. 5 லட்சம் மதிப்பிலான தாா்ப்பாய்கள் என மொத்தம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் அண்மையில் வழங்கினாா்.

கரோனா தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட இருளா், நரிக்குறவா், திருநங்கைகள், மீனவா், கலைக்குழுவினா், கல்லூரி மாணவா் என பல்வேறு தரப்பினருக்கு ரூ. 60.52 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com