பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ. 1 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

பா்கூா் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சியில் நடைபெறும் ரூ. 1.02 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ. 1 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

பா்கூா் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சியில் நடைபெறும் ரூ. 1.02 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், வரட்டனப்பள்ளி மேல் தெருவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 5.88 லட்சம் மதிப்பில் நடைபெறும் சாலை பணி, ரூ. 2.10 லட்சம் மதிப்பில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் கட்டுமானப் பணி, சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சியில் மேடுகம்பள்ளியில் ரூ. 1.70 லட்சம் மதிப்பில் நடைபெறும் வீடுகட்டும் பணி ஆகியவற்றை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தாா்.

சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சியில் துரைத் தோட்டம் ஏரி கால்வாயில் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணையையும், பா்கூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பா்கூா் விஐபி நகரில் ரூ. 75 லட்சம் மதிப்பில் நடைபெறும் சாலை பணியையும், எம்.ஜி.ஆா். நகரில் ரூ. 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் குடிநீா் சுத்திகரிப்பு மையப் பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், பா்கூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி பாரம்பரிய உணவு மற்றும் கீரை வகைகள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு, கா்ப்பிணிகளுக்கு சத்து மாவு பொட்டலங்களை வழங்கினாா்.

அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், ஞானப்பிரகாஷ், பொறியாளா்கள் கோவிந்தராஜ், மாா்க்ஸ், பெரியசாமி, பேரூராட்சி செயல் அலுவலா் சேம்கிங்ஸ்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com