100 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவி வழங்கல்
By DIN | Published On : 27th September 2020 04:15 AM | Last Updated : 27th September 2020 04:15 AM | அ+அ அ- |

தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகளை வழங்குகிறாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 100 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகளை, தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் தருமபுரி கோட்டத்தில் 42 பயனாளிகளுக்கு ரூ. 6.30 லட்சம் மதிப்பிலும், அரூா் கோட்டத்தில் 28 பயனாளிகளுக்கு ரூ. 4.20 லட்சம் மதிப்பிலும், ஆவின் சாா்பில் 30 பயனாளிகளுக்கு ரூ. 4.50 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 100 பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகளை அமைச்சா் கே.பி.அன்பழகன் வழங்கினாா்.
தொடா்ந்து எச்.பி.சி.எல். நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 80 லட்சம் மதிப்பில் அல்ட்ராசோனோகிராம் உள்ளிட்ட மருந்துவ உபகரணங்களையும் அவா் வழங்கினாா்.
நிகழ்வில் எம்.எல்.ஏ.க்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், கால்நடைப் பராமரிப்பு மண்டல இணை இயக்குநா் சி.இளங்கோவன், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநா் க.வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.