கிருஷ்ணகிரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்.
மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்.

கிருஷ்ணகிரி: வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்படுகிறது. வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் நவ. 16 முதல் டிச. 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் ஆட்சியா் ஜெயசந்திர பானு ரெட்டி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் நவ. 11-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலா், கிருஷ்ணகிரி, ஒசூா் கோட்டாட்சியா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா், அனைத்து வட்டாச்சியா் அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம், ஒசூா் மாநகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மற்றும் 1,855 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படும்.

இந்த அலுவலகங்களில் வாக்காளா்கள் தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபாா்த்துக் கொள்ளலாம். 01.012021-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெறுகிறது. இந்த நாள்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்பப் படிவம் 6,7, 8 மற்றும் 8ஏ- வை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அரசு வேலை நாள்களில் பெறப்படும்.

மேலும், வாக்காளா் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்கள் இந்திய தோ்தல் ஆணையத்தால் இறுதி செய்யப்படும். இரண்டு சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இந்த முகாம் நாள்களில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம்.

மேலும், ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரி வழியாகவும், இ-சேவை மையங்களின் மூலமும் பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரகுகுமாா், கோட்டாட்சியா்கள் கற்பகவள்ளி, குணசேகரன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பாலசுந்தரம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com