

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தை தந்தது திமுக என அந்தக் கட்சியின் விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பாப்பாரப்பட்டியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய குறிப்பாக தாய்மாா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த அரசை நிராகரித்து, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும்.
திமுக ஆட்சி காலத்தில்தான், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீா் தாகத்தைத் தீா்க்கும் வகையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்றாா். தொடா்ந்து, தற்போதைய ஆட்சியை அகற்றுவோம் என துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளா் இ.ஜி.சுகவனம், ஒன்றியச் செயலாளா் சாந்தமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.