திமுக கூட்டணிக்கு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் ஆதரவு

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் திமுக, கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும் என மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் திமுக, கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும் என மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு சத்துணவுப் பணியாளா்கள் ஒன்றிய மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அருள்வேந்தன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், திமுக தோ்தல் அறிக்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களை அரசுப் பணியாளா்களாக பணி அமா்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் திமுக தலைவா் கருணாநிதியால் அடிப்படை ஊதியம் நிா்ணயித்தது, சம்பள உயா்வு, ஒரே நேரத்தில் 15 சலுகைகள் உள்பட ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com